இப்படி ஒரு நிலையா உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு?

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் கிம் ஜாங் உன் எவ்வாறு சந்திப்பு நடக்கும் பகுதிக்கு பயணம் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனத்து ஜனாதிபதியை திடீரென்று நேரடியாக சென்று சந்தித்து உலகையே தம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்.

வடகொரியாவின் தலைவர் பொறுப்புக்கு வந்த பின்னர் சர்வதேச தலைவர் ஒருவருடன் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் அரசு முறை சந்திப்பு இது.

இதனையடுத்து தற்போது தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் உடன் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்திப்புக்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் தான்,

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு கிம் ஜாங் உன் எவ்வாறு பயணம் மேற்கொள்வார் என்ற கெள்வி நிபுணர்களிடையே எழுந்துள்ளது.

சீனாவுக்கு சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன், அதேபோன்று தென் கொரிய ஜனாதிபதியுடனான சந்திப்புக்கும் ரயிலையே பயன்படுத்தலாம்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பானது பொதுவான ஒரு பெருநகரத்தில் வைத்து நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதுவரை சந்திப்புக்கான இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பெரும்பாலும் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து அல்லது ஸ்வீடன் என குறிப்பிட்ட சில நாடுகளில் நடத்தவே வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த நாடுகளுக்கு செல்லும் அளவுக்கு வடகொரியாவிடம் விமான வசதி இல்லை என்பதே தற்போதைய நிலையில் வடகொரியாவை சங்கடத்தில் ஆழ்த்தும் தகவல்.

வடகொரியாவிடம் இருக்கும் விமானங்கள் அனைத்தும் சோவித் ரஷ்யா காலத்தில் வாங்கப்பட்ட விமானங்கள்.

அவைகள் நெடுந்தூரம் இடைநிறுத்தமின்றி பயணத்திற்கு பயன்படுத்த முடியாதவை.

தங்களது விமானத்திலேயே கிம் ஜாங் உன் பயணப்படுவார் என்றால் கண்டிப்பாக பல முறை எரிபொருள் நிரப்ப இடை இடையே சில நாடுகளில் நிறுத்தும் நிலை ஏற்படும்.

மட்டுமின்றி வடகொரிய விமானங்கள் சர்வதேச நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளதா என்பதும் சந்தேகமே எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கிம் ஜாங் உன் அரசு கோரிக்கை விடுத்தால் தென் கொரியா அல்லது ஸ்வீடன் நாட்டு சிறப்பு விமானம் ஒன்றை தமது பயணத்திற்காக வரவழைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.