யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதி மிருசுவில்பகுதியில் நேற்று (11) மாலை 4.35 மணியளவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியை அரச பேருந்து மோதி இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
அரச பேருந்து சாரதியின் அசமந்த போக்கினால் காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.