யாழ்ப்பாண மாவட்ட வேலைதேடும் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது என்று மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வேலையற்ற பட்டதாரிகளில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக்காக 2 ஆண்டுகள் பயிற்சி அடிப்படையில் நியமனம் வழங்குவதற்காக எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது.
நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல பட்டதாரிகள் குறித்த பதிவுகளை மேற்கொள்ள தவறியமை சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்பு பட்டப்படிப்புக்களை நிறைவு செய்தும் ஏற்கனவே தமது பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய அனைவரும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை தமது பதிவுகளை மாவட்டச் செயலகங்களில் மேற்கொள்ள முடியும் – என்றார்.