உத்தேச அமைச்சரவை ஒத்திவைக்கப்படும் நிலை காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீதான வெற்றி மற்றும் அதற்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகல் காரணமாக அமைச்சரவையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருக்கிடையில் விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
புத்தாண்டுக்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் நடைபெற வேண்டுமாயின் இன்றைய தினத்துக்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
எனினும் சுதந்திரக்கட்சி மட்டுமன்றி ஐ.தே.க அமைச்சர்கள் பலரும் வௌிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினத்துக்குள் அமைச்சரவை மாற்றம் சாத்தியப்படாத விடயம் என்று கூறப்படுகின்றது.
இதன் காரணமாக புத்தாண்டு தினத்தின் பின்னர் ஒருவாரம் கழிந்த நிலையில் அமைச்சரவை மாற்றங்கள் நடைபெறலாம் என்றே எதிர்பாா்க்கப்படுகின்றது.