பெண்கள் எல்லோரும் தங்கள் நகங்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவதுண்டு.
அதிலும் சிலருக்கு நகங்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக காட்சியளிக்கும். இது நகங்களின் அழகினை கெடுத்துவிடுகின்றது.
இதற்கு சிறந்த எளிய அழகு குறிப்புகளை பார்ப்போம்.
- எலுமிச்சை சாற்றில் குறைந்தது 10 நிமிடங்கள் நகங்களை ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது நகங்களில் உள்ள அனைத்துவிதமான அழுக்குகளையும் நீக்கி பளிச்சென்று ஆக்கும்.
- 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, விரல் நகங்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பேக்கிங் சோடாவில் உள்ள ஏஜெண்ட்டுகள், நகங்களில் உள்ள கறைகளைப் போக்க உதவும்.
- தினமும் விரல் நகங்களில் டூத் பேஸ்ட்டைத் தடவி பிரஷ் கொண்டு நகங்களைத் தேய்த்து 3 நிமிடம் ஊற வைத்தால் நகங்களில் உள்ள மஞ்சள் கறைகள் மறைந்துவிடும்.
- 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் செய்து, நகங்களின் மேல் மற்றும் அடிப்பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து, சோப்பு மற்றும் நீர் பயன்படுத்தி கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், நகங்கள் விரைவில் வெள்ளையாகும்.
- 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை ஒரு சிறிய கப் நீருடன் கலந்து, அந்நீரில் நகங்களை 5 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் நகங்களை வெண்மையாக்கலாம்.
- நகங்களின் அடியில் சோப்பு தடவி, பிரஷ் பயன்படுத்தி தேய்க்க வேண்டும். பின் நீரால் விரல் நகங்களைக் கழுவ வேண்டும். இதனால் நகத்தில் இருக்கும் அழுக்குகள் விரைவில் பறந்து விடும்.
- எலுமிச்சை சாறு மற்றும் உப்பை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, நகங்களில் தடவி தேயுங்கள். பின் 5 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.