இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தின் சனத் நகர் ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பொலிசார் சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
குறித்த சடலம் ஏற்கெனவே மாயமானதாக புகார் அளிக்கப்பட்டவரின் சடலம் என பொலிசார் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் சடலத்தில் இருந்த காயங்கள் மற்றும் சடலம் கிடந்த பகுதி ஆகியவை பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த நபரை கொலை செய்து ரயில் தண்டவாளம் அருகே வீசியுள்ளதை கண்டுபிடித்தனர்.
குறித்த கொலையை அவரது மனைவியே தமது கள்ளக்காதலனுடன் கூலிப்படையை ஏவி மேற்கொண்டது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கொல்லப்பட்ட காஜாவின் மனைவி சலேஹா என்பவருக்கும் குரேஷி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதை பல முறை காஜா கண்டித்தும் வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சலேஹா தமது கள்ளக்காதலர் குரேஷியுடன் இணைந்து கூலிப்படையை ஏவி காஜாவை கொலை செய்துள்ளார்.
இதற்காக கூலிப்படையினருக்கு 2 லட்சம் ரூபாய் பணம் குரேஷியின் நண்பர் வழியாக அளித்துள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
காஜாவின் சடலம் கிடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை பரிசோதித்த பொலிசார், குரேஷி மற்றும் அவருக்கு உதவிய கூலிப்படையை கைது செய்துள்ளனர்.