மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியது.
வீடு அமைந்துள்ள காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்தே குறித்த சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் கிளிநாச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளிற்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கனிஸ்டன் என்ற 8 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.