4வது பெண் விடயத்தில் சிக்கிய இளைஞர்!

இந்தியாவில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர் நான்காவது பெண்ணை திருமணம் செய்ய முயன்ற நிலையில் அவரின் ஏமாற்று வேலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாத்தை சேர்ந்தவர் பவன்குமார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு அய்லாபயி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

பின்னர் 2015-ல் தீபா என்ற பெண்ணை மணந்த பவன் 2017-ல் ராணி என்ற பெண்ணை மூன்றாவது முறையாக மணந்தார்.

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் பவன் வாழ்ந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பெண்ணை 4-வதாக பவன் மணக்க இருந்தார்.

இந்நிலையில் பவனின் முதல் மனைவி அய்லாபயி தனக்கு பின்னர் கணவர் இரண்டு பேரை மணந்ததையும், அடுத்து ஒரு பெண்ணை மணக்க இருப்பதையும் கண்டுப்பிடித்து மகளிர் அமைப்பிடம் புகார் அளித்தார்.

இது குறித்து தீபா மற்றும் ராணிக்கும் தகவல் தரப்பட்ட நிலையில் பவனின் மூன்று மனைவிகளும் அவர் வீட்டு முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.

ஆனால் பவன் தனது தந்தையுடன் தலைமறைவாகியுள்ளார்.

மூன்று பேரிடமும் பவன் 40 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பவனை தேடி வருகிறார்கள்.