சீவல் தொழிலுக்காக பனைமரத்தில் ஏறிய சீவல் தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்!!

சீவல் தொழிலுக்காகப் பனைமரத்தில் ஏறிய தொழிலாளியான குடும்பஸ்தர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை(12) பிற்பகல் யாழ். துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சீவல் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குறித்த குடும்பஸ்தர் நெற்றியை தினமும் வழமை போன்று பனைமரத்தில் ஏறியுள்ளார். இதன் போது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.