சற்று முன் சிரியா மீது துல்லியமான தாக்குதலை தொடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால் ரம் தமது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சிரியவின் எல்லைப் பாதுகாப்பு வலையம் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அது மிகவும் கடுமையான பாதுகாப்பு வளையம் ஆகும். அந்த எல்லையை கடந்தே எதிரி நாட்டு விமானஙள். அல்லது ஏவுகணைகள் சிரியாவுக்கு உள்ளே செல்ல வேண்டும்.
இன் நிலையில் சிரியா தனது எல்லையில் S400 என்னும் அதி நவீன ரக ஏவுகணைகளை வைத்திருக்கிறது. இவை போர் விமானங்களை சுட்டு வீழ்த்த வல்லவை. அத்தோடு எதிரியின் ஏவுகணையையும் வானில் வைத்து அழிக்க வல்லவை. இதனை ரஷ்யா சிரியாவுக்கு வழங்கியுள்ள நிலையில். முதலில் கடலில் இருந்து ஏவுகணை கொண்டு சிரியாவை தாக்க அமெரிக்க முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வரவுள்ள போர் விமானங்களை தாக்க S400 ரக ஏவுகணைகளை வைத்திருப்பதா ? இல்லை தற்போது வரும் நாச கார ஏவுகணைகளை தாக்கி அழிப்பதா ? என்ற இக்கட்டான நிலைக்கு சிரியா செல்லும். சிரியாவிடம் உள்ள S400 ஏவுகணைகள் கையிருப்பு குறைந்தால். அதனை ரஷ்யா கொடுத்து உதவ நேரிடும். ஆனால் அதற்கு சற்று கால அவகாசம் தேவை. எனவே அந்த இடைவெளியில் பிரித்தானியாவின் போர் விமானங்கள் சிரியாவுக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தும்.
இதுவே முதல் கட்ட திட்டமாக இருக்கவேண்டும் என்று சில ராணுவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். சுமாட் 12 போர் கப்பலை அமெரிக்கா சிரிய கடலுக்கு அப்பால் சர்வதேச பரப்பில் நிறுத்திவைத்துள்ளது. அங்கே இருந்து ஏவுகணையை ஏவினால், அது சிரியாவில் உள்ள ராணுவ நிலைகளை நிச்சயம் தாக்கி அழிக்கும். எனவே என் நேரம் ஆனாலும் அமெரிக்க கடல் படை, ஏவுகணைகளை ஏவலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.