‘மெர்க்குரி’ படம் ரிலிஸாகாததற்கு வருந்துகிறேன் – கார்த்திக் சுப்புராஜ்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சினிமா ஸ்டிரைக்கின் ஒரு பகுதியாக புதுப்படங்களை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ளது.

பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் மெர்க்குரி’. மார்ச் மாதம் வெளிவந்த டீசரில் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் இருந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வலுத்தது. பல பேச்சுவார்த்தைக்குப் பிறகும் படத்தை ஸ்டிரைக் முடியாமல் ரிலீஸ் செய்வது ஏற்புடையதாய் இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக கூற, நேற்று தமிழ்நாட்டைத் தவிர்த்து உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

மெர்குரி

இதைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தனது சமூகவலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ” இன்று ‘மெர்க்குரி’ என் தாயகம்… தமிழகம் அல்லாமல் உலகெங்கும் 1000 திரையரங்குகளில் பெரிய ரிலீஸை சந்தித்திருக்கிறது. எனது படத்துக்கு இவ்வளவு பெரியளவில் ரிலீஸ் செய்து, பலதரப்பட்ட ரசிகர்களைச் சென்றடைந்திருக்கிறது. இதுவரை நல்ல வரவேற்பும் பெற்றிருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, இந்தப் படத்தை என்னை இந்த அளவு ஆளாக்கிய தமிழ் மக்களுக்குக் காட்ட இயலாத சூழ்நிலையை எண்ணி வருந்துகிறேன்.  ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்தால் வர்த்தகம் பாதிக்கும் என்ற சிக்கலிலும் மாட்டிக்கொண்டோம்.

கார்த்திக் சுப்புராஜ்

படத்தின் இந்தி வெர்ஷனையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த வேலைநிறுத்தத்தில் தங்கள் வேலையை விடுத்து, அனைத்தும் சீரான நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கையுடன் முழு மூச்சாகப் பங்குகொண்டிருக்கும் ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு நாங்களும் எங்களது ஆதரவை தெரிவிப்பதால், என் தமிழ் ரசிகர்களுக்கு இந்த ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லை.

மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படத்தைக் காட்ட நானும் எனது படக்குழுவும் காத்துக் கொண்டிருக்கிறோம். தயவுசெய்து பைரசிகளை தவிர்க்கும்படியும், படத்தைத் தியேட்டர்களில் பார்க்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என கார்த்திக் தரப்பு கூறியிருந்ததும் அதற்குத் திரையுலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ்