அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக இணைந்து சிரியா மீது உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
டமாஸ்கஸில் தாக்குதல் நடத்தப்படுவதை சிரியா அரசு செய்தி ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறுகையில், ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே தாக்குதல் தொடங்கியுள்ளது.
இது ஒரு தனி மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல, அசுரனின் தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
சிரியா அரசு மக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்துவதற்கான பதிலடியாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
எனினும் ரசாயன தாக்குதலை சிரியா மறுத்த நிலையில், ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.