வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட காதலி… காதலன் செய்த காரியம்

சென்னை அம்பத்தூரில் வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட தனது காதலியை வீட்டுக்குள் புகுந்து தாக்கிய காதலனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த நிகிதா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கு வீட்டில் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த வாலிபர், நிகிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இதையடுத்து நிகிதா தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

நிகிதா தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஹெச்.டி படித்து வரும் நவீன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலிசார் கூறுகையில், “நிகிதாவும் நவீனும் ஒரே கல்லூரியில் பயின்றுள்ளனர். அப்போது இருவரும் பழகியுள்ளனர். நவீன், நிகிதாவை காதலித்துள்ளார். இந்த சமயத்தில் தான் நிகிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதை நவீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த மாதம் நிகிதாவுக்கு திருமணம் நடக்கவுள்ளது.

இதையறிந்த நவீன், சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் நிகிதா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தகராறு செய்து, ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பொருள்களைச் சூறையாடியுள்ளார். பிறகு நிகிதாவையும் தாக்கியுள்ளார் எனக் கூறியுள்ளனர்.