புத்தாண்டு தினத்தில் பெரும் சோகம்!

போதையில் வாகனத்தினை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு நாடு பூராகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை தலைமை காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

விசேடமாக அதிவேக வீதியின் ஊடாக போதையில் வாகனத்தினை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு காவற்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை போதையில் வாகனம் செலுத்திய 32 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மதியம் 12 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் திடீர் விபத்து காரணமாக 197 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்தில் 07பேர் உயிரிழந்துள்ளனர்.

தம்கமுவ – மீரிகம வீதி மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே நீர்கொழும்பு , எகலியாகொடை, வெலிமடை, மிகிந்தலை, ஹூங்கம மற்றும் அனுராதபுரம் – சாலியவேவ பிரதேசத்தில் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.