சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வேலைபளு காரணமாக சாப்பிடாமல் இருப்பது, தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் சொல்லலாம்.
அதிலும் கற்களின் அளவு 5.மி.மி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரி செய்யலாம்.
இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும். மேலும் சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும். இதை கட்டுப்படுத்த வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம்.
தண்ணீர்
சிறுநீரகக்கற்கள் வருவதற்கான முக்கிய காரணமாக இருப்பது, தண்ணீரானது உடலில் இல்லாததால் தான். எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிகிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
வெந்தய நீர்
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.
டால் மிஸ்ரி
சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருளாக இருப்பது டால் மிஸ்ரி. அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கரைந்தபின், மறுநாள் காலையில் குடித்து வந்தால் நல்லது.
வாழைத்தண்டு
சமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும்.
அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.
கொத்தமல்லி இலைகள்
கொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.