கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகளின் பணிகள் முடங்கியுள்ளன.
குடிவரவு குடியகழ்வு கவுன்டர்கள் சில இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதனால் வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.