இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டவர்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு களுத்துறை கடற்கரைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டல்களில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களினால் இந்த விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இணைந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கயிறு இழுத்தல், பனிஸ் சாப்பிடுதல் போன்ற விளையாட்டுகளில் மிகவும் ஆர்வத்துடன் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டனர்.
அத்துடன் சிங்கள பெண்கள் போன்று உடை அணிந்து வெளிநாட்டு பெண்கள் அங்கு வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.