தொடக்க காலத்தில் தக்காளியை நஞ்சுக்கனி என்றே விலக்கி வைத்திருந்தனர், காலப்போக்கில் இதன் சுவை அறிந்து சமையலில் பயன்படுத்த தொடங்கினர்.
தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் விட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.
இதன் முக்கிய அம்சம் என்னவெனில் தனியே சாப்பிட்டாலும், சமையலுக்கு பயன்படுத்தினாலும் இதன் சத்து குறைவதே இல்லை.
தினம் ஒரு தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் தக்காளியில் நிறைந்துள்ள லைக்கோப்பின் என்னும் பொருள் தான், இதுவே தக்காளியின் சிவப்பு நிறத்திற்கும் காரணமாக அமைகிறது.
இதுமட்டுமின்றி புற்றுநோயை தடுக்கும் சக்தி கொண்டது லைக்கோபின், தக்காளிக்கூழானது கணையம், பெருங்குடல், மார்பகம், கருப்பை வாய் ஆகிய உறுப்புகளின் புற்றுநோய் வாய்ப்பை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மரபணுக்களின் செயல்பாடுகளையும் சீராக்குகிறது.
மற்ற பயன்கள்
- தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.
- நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
- காலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.
- தக்காளியை அரைத்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால் முகப்பரு நீங்கி சருமம் பளபளக்கும்.