இன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது மிகவும் கொடுமையான வலியைத் தரக்கூடியது.
ஒற்றைத் தலைவலிக்கு என்ன மாதிரியான இயற்கை வழிகளில் தீர்வு காணமுடியும் என்று பார்க்கலாம்.
இஞ்சியைத் துருவி ஒரு கப் தண்ணீரில் பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அதை வடிகட்டி தேன் சேர்த்து டீயாக குடிக்கலாம். அது தலைவலி, ஜலதோஷம், தும்மல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
எப்போதெல்லாம் தலைவலி இருப்பது போல் உணர்கிறீர்களோ அப்போது ஐஸ் கட்டிகளை எடுத்து, கழுத்து மற்றும் நெற்றிப் பகுதிகளில் சில நிமிடங்கள் வரை வைத்து அழுத்திப் பிடித்திருங்கள்.
5 கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க விடுங்கள். அதில் 6 துளிகள் அளவுக்கு லாவெண்டர் ஆயிலை விட்டு, தலையை கொஞ்சம் தூரமாக வைத்து, அதிலிருந்து வருகிற ஆவியை நன்கு உள்ளிழுத்து சுவாசியுங்கள்.
அதன்பின், சில துளி ஆயிலை மீண்டும் எடுத்து நெற்றியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். தலைவலி பறந்துவிடும்.
பேசில் இலைகளையோ அல்லது ஆயிலையோ இதற்குப் பயன்படுத்தலாம். பேசில் ஆயில் இதமளிக்கக்கூடியது. தசைகளுக்கு நல்ல அதமளிக்கும். தலைவலியால் உண்டாகும் வலியைக் குறைக்கும்.