நுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் நிறை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். இந்தக் கேக் 111 மீற்றர் நீளம் கொண்டது. இவ்வாறான ஒரு உருளைக்கிழங்கு கேக் தயாரிக்கப்பட்டது. இதுவே முதல்முறையாகும் என இதனை தயாரித்த தலைமை சமையல்காரர் விஜயராஜ் ஜயரட்ண தெரிவித்துள்ளார்.இதனைத் தயாரிக்க 100 கிலோ உருளைக்கிழங்கு, 900 முட்டைகள், 40 கிலோ கொக்கோ கிறீம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான செலவு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாகும். 50 சமையற்காரர்கள் இதனை 3 நாள்கள் தயாரித்து நிறைவு செய்துள்ளனர்.