இலங்கை விமான சேவையின் வரலாற்றில் நடப்பு நிதியாண்டில் பாரிய இலாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இலங்கை விமான சேவை கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான நிர்வாக முடிவுகள் மற்றும் திறமையற்ற முகாமைத்துவம் காரணமாக தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது..
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இலங்கை விமான சேவை 126.9 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. அமெரிக்க டொலர்களில் இதன் மதிப்பு 830.7 மில்லியன் டொலர்களாகும்.
இலங்கை விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதன் 38 வருட வரலாற்றில் இந்தளவு பாரிய தொகை வருமானம் ஈட்டப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.
அண்மைக்காலங்களில் இலங்கை விமான சேவை அதன் சேவைகளை ஹைதராபாத், கெயின் தீவுகள் போன்ற புகழ்பெற்ற நகரங்களை நோக்கி விஸ்தரித்திருந்தது. இதன் காரணமாகவே நடப்பு நிதியாண்டில் பெரும் வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடிந்திருப்பதாக விமான சேவைகள் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.