ஈழ போர் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் மணிவண்ணன் நடத்திய நாடகம் ஒன்றில் நடித்த விஜயகாந்த், அதில் கிடைத்தப் பணத்தினை அப்படியே அவர்களுக்கு கொடுத்து உதவியதாக நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 40 வருடங்கள் ஆகிவிட்டன. இதனையொட்டி சிறப்பு நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்தியராஜ் “நடிகர் விஜயகாந்த் தான் நிஜ கதாநாயகன். மகனுக்கு தலைவர் பிரபாகரன் பெயரை சூட்டியவர்.
ஈழப் போர் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் மணிவண்ணன் நாடகம் ஒன்றினை நடத்தியிருந்தார். இதன் போது பல நடிகர்களும் தயக்கம் காட்டியிருந்தனர்.
ஆனால் விஜயகாந்த் அதில் நடித்தார். அதுடன், அதில் கிடைத்தப் பணத்தினை அவர்களுக்கு கொடுத்து உதவினார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.