உலகின் மிகக் கொடிய ஜெல்லிமீனால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடும் 14 வயது சிறுமி தம்மை சாக அனுமதிக்க வேண்டும் என தாயாரிடம் கெஞ்சியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் Goodwyn Island பகுதியில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று தமது தோழி ஒருவருடன் நீச்சலில் ஈடுபட்டிருந்தார் 14 வயது Hannah Mitchell.
அப்போது எதிர்பாராத வகையில் உலகின் மிகக் கொடிய ஜெல்லிமீன் ஒன்று ஹன்னாவை தாக்கியுள்ளது.
இதில் நிலைகுலைந்த ஹன்னாவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அப்போது கோமாவில் விழுந்த அவர் நீண்ட இரு வாரகால சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
Irukandji ஜெல்லிமீனானது உலகின் மிகக் கொடிய விஷத்தன்மை கொண்டதாகும். இது தண்ணீரின் நிறத்தில் இருப்பதால் அதை கண்டுபிடிப்பதே அரிது என கூறப்படுகிறது.
குறித்த ஜெல்லிமீன் தாக்கிய பின்னர் ஹன்னா உயிர் பிரியும் வலியை அனுபவித்து வருகிறார் என கண்ணீர் விடும் அவரது தாயார்,
உடலின் அனைத்து உறுப்புகளும் உடைந்து சிதறுவது போல் தாம் உணர்வதாக ஹன்னா தெரிவித்துள்ளதாகவும் அவர் குடிப்பிட்டுள்ளார்.
வலி தாங்க முடியாமல் ஹன்னா அவதிப்படுவது தம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனவும், தம்மை கொன்று விடுங்கள் என அவர் நாளும் கெஞ்சுவது தம்மையும் சேர்த்து சாகடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.