கொழும்பை அண்மித்த பகுதியில் மனிதாபிமானம் மரணித்துப் போன மக்கள்

பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கொண்டமையினால் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், ஹம்பாந்தோட்டையில் இருந்த வந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேர் எரிகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலந்தோட்டை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி முழுமையாக தீப் பற்றி அழிந்துள்ளது. இந்த சம்பவத்தினால் பேருந்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும் பேருந்தில் பயணித்தவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளாகும்.

சம்பவத்தை பார்த்த மக்களில் பலர் விபத்துக்குள்ளானவர்களின் உயிரை காப்பாற்றாமல் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்துள்ளனர்.

தொலைபேசி மோகத்தில் மனிதாபிமானம் மரணத்துள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.