சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில், புதிய கூட்டு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றுள்ளார். எதிர்வரும் 22ஆம் நாள் அவர் நாடு திரும்பவுள்ளார்.
அதன் பின்னர், கூட்டு அரசாங்கம் தொடர்பான புதிய உடன்பாடு, இரண்டு கட்சிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த உடன்பாடு அமையும்.
கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற சிக்கல்கள் ஏற்படாத வகையில் புதிய வழிகாட்டு முறைகளையும் இந்த உடன்பாடு கொண்டிருக்கும்.
புதிய உடன்பாட்டைத் தயாரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.