இந்தியாவில் வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி துன்புறுத்தும் கணவரின் வீடியோ வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் ஷாகன்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.
ரூ.50 ஆயிரம் கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது, மனைவி பணம் தர மறுக்கவே பெல்டால் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் அவர் மயக்கமடைந்து விழவே, துப்பட்டாவால் கைகளை கட்டித் தொங்கவிட்டு அடித்துள்ளார்.
இதை வீடியோவாக பதிவு செய்து மனைவியின் தம்பிக்கு அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார்.
உடனடியாக அவர்கள் பொலிசில் புகார் அளிக்க, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பெண்ணை மீட்டதுடன் தலைமறைவான கணவர் மற்றும் குடும்பத்தினரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.