மகள்களுடன் தனியாக வாழ்ந்த இளம் தாய் செய்த செயல்!

இந்தியாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில், குறித்த நபராலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரை சேர்ந்தவர் பிங்கி. இவருக்கு திருமணமான நிலையில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கணவரை பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்து விட்ட பிங்கி தனது மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கமல் கபூர் என்பவருடன் பிங்கிக்கு கடந்த ஆறு மாதங்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கமல் பிங்கி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் பிங்கி வீட்டுக்கு வந்த கமல் தனியறையில் அவருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த கமல் தன்னிடமிருந்த துப்பாக்கியால் பிங்கியை சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.

பிங்கியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து அறையில் இருந்த அவரின் மகள்கள், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிங்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பிங்கியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

பிங்கியை கமல் ஏன் கொலை செய்தார் என்பது இன்னும் தெரியாத நிலையில் தலைமறைவாக உள்ள கமலை பொலிசார் தேடி வருகிறார்கள்.