அழுவதா சிரிப்பதா தெரியவில்லை: கலங்கிய போனி கபூர்!

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ள இந்நேரத்தில் சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை என அவரின் கணவர் போனி கபூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறியதாவது, ஒரு குடும்பமாக இந்த நல்ல விடயத்தை கொண்டாடுவதா வேண்டாமா என்று தெரியவில்லை.

இதை கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பதா இல்லை ஸ்ரீதேவியை நினைத்து அழுவதா என்று சத்தியமாக தெரியவில்லை.

ஆனால் இந்த விருதை நாங்கள் உயிருள்ள வரைக்கும் மறக்க மாட்டோம்.

ஸ்ரீதேவியின் புகழ் என்றும் மறையாது என கூறியுள்ளார்.