மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்த பிரபல நடிகர்…சத்யராஜ் பேட்டி!

ஈழப் போருக்காக தமிழக கலையுலகிலிருந்து முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இருந்த அளப்பெரிய மரியாதையின் காரணமாகவே அவரது மூத்த மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜயகாந்தின் நாற்பதாவது சினிமா நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நடிகர் சத்தியராஜ் விஜயகாந்தின் கடந்த கால வரலாறு குறித்து பேசியுள்ளார்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சத்தியராஜ் மேலும் தெரிவிக்கையில்,ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது பெரியார் திடலில் நாடக நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதில் நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வசூலினைத் தேடிக்கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

மணிவண்ணனால் எழுதி அரங்கேற்றப்பட்ட குறித்த நாடக நிகழ்வு ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலிக்குமுகமாக நடத்தப்பட்டதாகவும் அதில் விஜயகாந்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இறுக்கமான அந்த காலத்தில் விஜயகாந்த் தனது மகனுக்கு பிரபாகரன் என்ற பெயெரை வைத்தமையானது அவரது கெத்தைக் காட்டுவதாக நடிகர் சத்தியராஜ் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பான காணொளி தற்பொழுது அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.