இலங்கையில் மாபெரும் படகு ஓட்டப் போட்டி!

இலங்கை படகு ஓட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய படகு ஓட்டப்போட்டி இம்மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டி ராஜகிரிய தியவன்னாவ அருகாமையிலுள்ள தியவன்னா படகு ஓட்ட விளையாட்டு மத்திய நிலையத்தை கேந்திரமாக கொண்டு ஆரம்பமாவுள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், இது 33 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த போட்டி, 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இதற்கு முன்னர் ஒவ்வொரு வருட இறுதியிலும் நடாத்தப்பட்டு வந்தது.

இதேவேளை இந்த போட்டியை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதில் 18 வயதிற்குட்பட்ட, 18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் பகிரங்க கனிஷ்ட போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.