சி.சி. ரி.வி.யின் உதவியால் சிக்கிய இளம் பெண்கள் – (காணொளி)

கடையொன்றில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி.யின் மூலம் கொள்ளையில் ஈடுபட்ட இருபெண்கள் கையும்களவுமாக பிடிபட்ட சம்பவமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லண்டனில் இரு இளம் பெண்கள் பொருட்கொள்வனவுக்காக கடையொன்றுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இரு பெண்களும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொருட்களை அவதானிப்பது போல பாசாங்கு செய்து அருகில் நின்ற முதியவரொருவர் பொருட்களை ராக்கையில் இருந்து எடுக்கும்போது தாமும் பொருட்களை எடுப்பதைப்போன்று குனிந்து முதியவரின் ஆடை பைக்குள்ளிருந்த பணப் பொதியை திருடியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை சி.சி.ரி.வி. கமெராவின் மூலம் அவதானித்த கடை உரிமையாளர் உடனடியாக திருட்டில் ஈடுபட்ட இரு இளம் பெண்களையும் துரத்திய போது அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் லண்டன் பொலிஸார் குறித்த இருவரையும் தேடிவருவதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.