யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழிநுட்ப பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பதிவாளரினால் இன்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விடுதி வசதி பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் விடுதிக்கு திரும்ப முடியும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.