கம்பஹா – சீதுவை நகரில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று காலை தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணத்தொகை இதுவரை மதிப்பிடப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.