ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழும் ஜப்பானியர்கள்! என்ன தான் சாப்பிடுகிறார்கள்……

ஜப்பான் நாட்டினர் மிக அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழ முழு காரணமாக இருப்பது அவர்களது உணவுப்பழக்கம் தான். இவர்களுக்கு மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை எல்லாம் குறைவாகத் தான் தாக்குகிறது.ஜப்பானில் சோயா மிகவும் பிரபலம். அவர்களது தினசரி காலை உணவிலேயே சோயா சேர்த்துக் கொண்டிருப்பார்கள். இது எனர்ஜியை கொடுப்பதுடன் உடல் எடையை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவிடும்.

ஜப்பான் மக்கள் பெரும்பாலும் தங்கள் உணவுகளில் மீன் சேர்த்துக் கொள்கிறார்கள். மீனில் லீன் ப்ரோட்டீன் இருக்கிறது. அதோடு, இதில் சாச்சுரேட்டட் ஃபேட் கிடைத்திடும். இதைத் தவிர மீன் சாப்பிடுவதால் விட்டமின், ஃபேட்டி ஆசிட் உட்பட பல்வேறு சத்துக்கள் கிடைத்திடும்.ஜப்பான் மக்கள் அரை வயிற்றுடன் தான் ஒவ்வொரு வேளை உணவையும் முடித்துக் கொள்கிறார்கள்.க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் ஜப்பான் மக்களிடத்தில் அதிகமிருக்கிறது. இதில் நிறைந்திருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உடல் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.ஃபெர்மெண்டட் உணவுகள், அதாவது புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள். உணவும் சீக்கிரம் செரிக்கிறது. இது உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது.

ஒரு வேளை உணவில் ஜப்பான் மக்கள் நான்கு முதல் ஐந்து வகையான காயை சேர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை சாலெட்டுகளாக உண்ணப்படுகின்றது.

உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது முதலில் காய்களையே சாப்பிட வேண்டும், இது நம் வயிற்றிலிருக்கும் டாக்சின்களை உறிந்து கொள்ளும். அதோடு, இதில் ஏராளமான ஃபைபர் இருப்பதால் சீக்கிரம் செரிப்பதுடன் இன்ஸுல் சுரப்பையும் துரிதப்படுத்தும்.ஜப்பான் மக்கள் சாப்பிடக்கூடிய ஒரு  முழுமையான உணவில் என்னென்ன அடங்கியிருக்கும் தெரியுமா?ஒரு க்ரில்ட் பிஷ், ஒரு கப் அரிசி சாதம், ஒரு கப் காய்கறி சாலட், ஒரு கப் சூப், ஒரு கப் பழங்கள் மற்றும் க்ரீன் டீ. இதனை தங்களது ட்ரடிஷனல் ஃபுட் என்றும் சொல்கிறார்கள்.