அக்ஷய திதியை தினத்தில் தங்கத்தை மட்டுமல்ல இதை வாங்கினாலும் செல்வம் பெருகுமாம்……!

அட்சய திருதியை நாளில் ஒரு கைப்பிடி உப்பை வாங்கி வைத்து வழிபட்டால் நமது வீட்டில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். அன்றைய தினத்தில் ஒரு உப்பு பையை வாங்கி பூஜை அறையில் வைத்துவிட்டு, அதன் பிறகு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.இறைவனுக்கு தீப தூபம் காட்டும் போது,  உப்பிற்கும் காட்ட வேண்டும். அதன் பிறகு அந்த உப்பை எடுத்து உப்பு டப்பாவில் கொட்டி அதை யன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் நமக்கு கிடைக்கும்.

உப்பு வழிபாட்டை இன்று செய்வதன் மூலம் நமது கடன் சுமைகள் விரைவில் நீங்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அட்சய திருதியை நாளில் தானம் செய்வது நமக்கு அமோக பலனை தரும்.அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்:ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேரத் தொடங்கும்.