கொழும்பில் தீ பற்றிக் கொண்டமையால் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குப்பை எரித்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் ஆடையில் தீ பற்றியமையால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ராஜபக்ச பேடிகே சீதேவிகா ராஜபக்ச என்ற 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் சாட்சி வழங்கிய கணவர், “உயிரிழந்திருப்பது எனது மனைவியாகும். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது பிள்ளை பிறந்த பின்னர் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் காலை நேரங்களில் அவர் தாமதமாகவே எழும்புவார்.
சம்பவம் இடம்பெற்ற அன்று தான் மகளை ஞாயிறு பாடசாலையில் விட சென்றிருந்தேன். மனைவி, மகன் மற்றும் எனவும் அம்மாவும் வீட்டில் இருந்தார்கள். இதன் போது எனது அம்மா வீட்டை சுற்றியிருந்த குப்பைகளை சேகரித்து ஒரு இடத்தில் கொண்டு வந்து வைத்திருந்தார்.
இதன்போது காலையிலேயே குளிராக உணரவும் அந்த குப்பைக்கு மனைவி தீ வைத்துள்ளார். அது திடீரென அவரது ஆடையில் பட்டு உடல் முழுவதும் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. தாய் தீயை கட்டுப்படுத்தி மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்” என குறிப்பிட்டார்.