கரடியை வைத்து கால்பந்தாட்டம்! வைரலாகும் வீடியோ!

ரஷ்யாவில் உள்ள கால்பந்து அணி கரடியை வைத்து கால்பந்தாட்டத்தை தொடங்கிய சம்பவம் வைரலாகி உள்ளது.

ரஷ்யாவில் உள்ள யாதிகோர்ஸ்க் நகரில் மாசூக் கே.எம்.வி மற்றும் அன்குஸ்ட் என்ற இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கரடியை ஒன்று அழைத்து வந்து போட்டியைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.