முதன்முறையாக தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி கெசட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 நாட்களில் சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 59 பேர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி கைது செய்யப்பட்ட அவரது தனிப்பட்ட விபரங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.
சவுதியில் தேசிய பாதுகாப்பு தலைமையகத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.