நடிகை ஜீவிதா, தனது கணவரின் பாலியல் ஆசையை தீர்க்க பல பெண்களை மிரட்டி படுக்கைக்கு அனுப்பியுள்ளதாக, சந்தியா என்ற சமூக ஆர்வலர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்துகொண்டு கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சந்தியா கூறுகையில், நடிகை ஜீவிதா தனது கணவர் ராஜசேகரின் பாலியல் ஆசையை தீர்த்து வைக்க, பல பெண்களை அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த பெண்கள் அமீர்பேட் பகுதியில் வேலை பார்ப்பவர்கள் என்றும், அவர்களை மிரட்டி வைத்துள்ள ஜீவிதா, தனது கணவரின் ஆசைக்கு அவர்களை பயன்படுத்திக் கொண்டார் என்றும் சந்தியா தெரிவித்துள்ளார்.
மேலும், ஜீவிதா பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்ப்பவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.