நுவரேலியாவைக் கைவிட்ட சுற்றுலாப் பயணிகள்!

இலங்கையின் குட்டி லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவிற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால், சுற்றுலாப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த முறை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில தினங்களுக்கு முன் கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.அத்துடன், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு செல்வதை தவிர்த்திருப்பதால் அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், நுவரெலியா நகரம், பூங்காக்கள், வெறிச்சோடியிருப்பமை குறிப்பிடத்தக்கது.