சுவிற்சிலாந்தில் கோர பஸ் விபத்து!

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இலங்கையர்கள் பலர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.சுற்றுலாவுக்கு சென்ற இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று நேற்று சுவிஸில் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 சுற்றுலாப்பயணிகளை சென்ற இந்த பேருந்துஇ சூரிச்சின் வடக்குப்பகுதி அதிவேக வீதியில் வைத்து இரண்டு கனரக வாகனங்களுடன் மோதியுள்ளது.இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.15க்கு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒருவர் கடுமையன காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என சுவிட்ஸர்லாந்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.