வடக்கிலிருந்து தெற்கிற்கான நல்லுறவுப் பயணம் இன்று ஆரம்பம்!

வடக்கிலிருந்து தெற்கிற்கான நல்லுறவுப்பயணம் இன்றையதினம்(19-04-2018) ) வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை நல்லுறவு, நம்பிக்கையுடனான நல்லிணக்கம் என்பவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் திட்டத்திற்கு அமைவாக வவுனியா மாற்றும் மன்னார் பொலிஸ் பிராந்தியங்களில் இருக்கக்கூடிய 22 பொலிஸ் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 44 உறுப்பினர்களுடன் தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களுக்கு இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவில் பங்கு பற்றுபவர்கள் பிரதேச மக்களால் வரவேற்கப்பட்டு உபசரித்து நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்படுவதுடன், கதிர்காமம், கிரி விகாரை, கதிரமலை, செல்ல கதிர்காமம், உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை தரிசிப்பதற்கும், காலி பிரதேசத்தில் புதுவருட நிகழ்வும், தம்புள்ள பிரதேசத்தில் கலாசார நிகழ்வும் மகியங்கனை மற்றும் தம்பனை பிரதேசத்தில் ஆதிவாசிகளுடனான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.