சதம் கண்ட தாய்!! பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!!

100 வயதை பூர்த்தி செய்த தாயொருவர் நேற்று பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். கோணாவில் பகுதியில் வாழ்ந்து வரும் இந்த தாயார் 1918-ம் ஆண்டு பிறந்துள்ளார்.

5 பிள்ளைகளின் தாயாரான இவர் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.நேற்று தனது 100ஆவது பிறந்தநாளை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகள் என மகிழ்வுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

தான் இந்த அளவு வயதுவரை இருப்பதற்கு சிறந்த உணவுகளை அந்நாட்களில் உண்டமையாலேயே, வாழ்ந்ததாக குறித்த தாயார் குறிப்பிடுகின்றார்.இவரது மூத்த மகள் 80 வயதில் இந்தியாவில் வாழ்ந்து வருவதாக இவரது மகன் மேலும் தெரிவித்துள்ளார்.