நீண்டகாலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த 7 பிள்ளைகளின் தாய் தனக்குத் தானே தீயிட்டு, எரி காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்று திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் தெரிவித்தார்.
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சோதிலிங்கம் சாந்தகுமாரி (வயது-57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் விசாரணை நடத்திய திடீர் இறப்பு விசாரணை அதிகாரி தெரிவித்ததாவது,
பல ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த சாந்தகுமாரி அடிக்கடி தான் சாகப் போவதாக குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார். ஒரு முறை இவர் தவறான முடிவெடுத்து உயிர்துறக்க முற்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு 12 மணியவில் தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றித் தீ மூட்டிக் கொண்டார்.
சத்தம் கேட்டு அறைக்குள் நுழைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்பித்தனர். சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை அவர் உயிரிழந்தார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது – என்றார்.