கொழும்பு புறநகரில் பாரிய வெடிப்பு! ஐவர் ஸ்தலத்தில் பலி!

ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்புச்சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.சற்றுமுன் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த பலர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்த நான்கு பேர் பிரதேசவாசிகள் என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏனையோர் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் தற்போது கிடைத்த தகவல்களின் படி;

இன்று மதியம் குறித்த தொழிற்சாலையின் அமோனியா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கியொன்றில் விழுந்த நபரை காப்பாற்ற குழுவொன்று சென்றுள்ளது.இதன்போது ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேரும் மயக்கமுற்று தாங்கியில் விழுந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் ஐவர் உயிரிழந்ததுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.