மணமகளின் தாயால் திருமணம் முடிந்த சில நிமிடங்களிலே விவாகரத்து கேட்ட மணமகன்…

மகளிடம் இறுதியாகப் பேசுவதற்கு தாயார் மருமகனிடம் அனுமதி கோரினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மணமகன் அங்கு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார். தனக்கு உடனடியாக விவாகரத்துத் தருமாயும் அவர் கோரினாார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எகிப்து நாட்டில் புறநகர் பகுதி ஒன்றில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில் மணமக்கள் இருவரும் தங்கள் வாகனத்தில் புறப்பட தயாராக இருந்தனர். அப்போது மணமகளின் தாயார் காரின் அருகாமையில் வந்து, தனது மகளுடன் ஒரு நிமிடம் பேச வேண்டும் எனவும், அவளுக்கு கடைசியாக பிரியாவிடை கூற வேண்டும் எனவும் மருமகனிடம் கேட்டுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மணமகன், இதுவரை அனைத்து நாளும் அவள் உங்களுடனே தானே இருந்தாள், தற்போது அவளிடம் பிரியாவிடை கூற வேண்டிய அவசியம் இல்லை எனச் சத்தமிட்டு கத்தியுள்ளார்.

இந்த களேபரத்தை கண்டு மணமகளின் மாமனார் ஒருவர் மணமகனை அணுகி சமாதானம் செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சியும் வீணானது. இதனிடையே கோபத்தில் அலறிய மணகன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து , தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. விவாகரத்து உடனே வேண்டும் எனவும் கூறினார்.

மணமகனின் இந்த பேச்சை கேட்ட மணமகள் குடும்பத்தினர் அடிதடியில் இறங்கியுள்ளனர். திருமண மண்டபத்தின் வெளியே குழுமியிருந்த இரு குடும்பத்தாரும் அந்த சண்டையில் ஈடுபட்டனர்.இதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.