நூறு வயதிலும் சளைக்காமல் களம் குதித்துள்ள தேர்தல் மன்னன்!!

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 100 வயதான சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர்  வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.பெங்களூரில் வசித்து வரும் சுதந்திரப் போராட்டத் தியாகியான எச்.எச்.துரைசாமி, என்பவர் கடந்த வாரம் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்த நிலையிலேயே அவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். இவர் கர்நாடக மாநிலத்தில் 1952-ம் ஆண்டு நடந்த முதலாவது சட்டசபைத் தேர்தலில் இருந்து இப்போது 2018-ல் நடைபெறும் 15-வது தேர்தல்வரை அனைத்துத் தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.

1951-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கலாசிபாளையம் பிரிவில் போட்டியிட்ட அவர் தனது முதலாவது தேர்தலில் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

எனினும், தொடர்ந்து சளைக்காமல் அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டு தேர்தல் மன்னன் பட்டம் பெற்றுள்ளதுடன், இப்போதும் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.