இலங்கைப் பாராளுமன்றம் 100 கோடி ரூபா செலவில் மீள் புனரமைப்பு!!

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியானது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 100 கோடிரூபா செலவில் மறுசீரமைப்புச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்குரிய அமைச்சரவைப் பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுசெயலர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் கூ​ரை, வாயில் கதவுகள், மலசல கூடம், நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன மறுசீரமைப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.