குண்டா இருந்து ஒல்லியா மாறிய நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் ஃபிட்னஸ் ரகசியங்கள்!

டயட்டரி நார்ச்சத்து வயிற்றை நிரப்புவதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும். மேலும் இந்த உணவு எலும்புகளை வலிமையாக்கும்.
சோனாக்ஷி மேற்கொண்ட டயட் திட்டம்!அதிகாலை

1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிப்பாராம். இதனால் இந்த பானம் உடலில் இருந்து அனைத்து டாக்ஸின்களையும் வெளியேற்ற உதவும். மேலும் இது முறையான குடலியக்கத்திற்கு சிறப்பான பானமும் கூட.

காலை உணவுசெரில் மற்றும் கொழுப்பு குறைவான பால் = 1 முழு கோதுமை டோஸ்ட்.

இந்த காலை உணவில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது. டயட்டரி நார்ச்சத்து வயிற்றை நிரப்புவதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும். மேலும் இந்த உணவு எலும்புகளை வலிமையாக்கும்.

மதிய உணவு1 கப் மிக்ஸ்டு வெஜிடேபிள் கறி மற்றும் 2 சப்பாத்தி மற்றும் சாலட்.

இந்த மதிய உணவில் உடலுக்குத் தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் உடல் ஆரோக்கியம் பாழாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

மாலை நேர ஸ்நாக்ஸ்1 கப் க்ரீன் டீ அல்லது ஒரு பௌல் பழங்கள்.

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவும். பழங்களில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து ஏராளமாக இருக்கும்.

இரவு உணவு1/2 கப் தால், மிக்ஸ்டு வெஜிடேபிள் கறி, 1 துண்டு சிக்கன் நெஞ்சுக்கறி அல்லது க்ரில்டு மீன்.

இரவு நேரத்தில் இந்த உணவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஆரோக்கியமான டயட்டுடன், சோனாக்ஷி சரியான உடற்பயிற்சியையும் மேற்கொண்டார்.

சோனாக்ஷியின் டயட் விதிமுறைகள்:* தினமும் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை உட்கொள்வாராம்.

* தண்ணீர் அதிகம் குடிப்பாராம்.

* மாலை 6 மணிக்கு மேல் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளமாட்டாராம்.

* உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை மிதமான அளவில் தான் சாப்பிடுவாராம்.

சோனாக்ஷி இவற்றை மனதில் கொண்டு தான் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறாராம். அதேப்போல் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான உடல் கொழுப்பைக் கரைக்கும் உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம்.

சோனாக்ஷியின் உடற்பயிற்சி திட்டம்

நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கு தினமும் 2 முறை ஜிம் செல்வாராம். சோனாக்ஷி சின்ஹாவின் ஃபிட்னஸ் ட்ரெயினர் யாஷ்மின் கராச்சிவாலா என்பவராவார். இவரது உதவியுடன் தான் சோனாக்ஷி அன்றாடம் ஜிம்மில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சோனாக்ஷி மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள்* கார்டியோ

* பங்ஷனல் ட்ரெயினிங்

* ஹாட் யோகா

* ஸ்பின்னிங்

* நீச்சல் அல்லது டென்னிஸ்

* பளுத் தூக்கும் பயிற்சி

இந்த அனைத்து உடற்பயிற்சிகளும் இவரை தொடர்ச்சியாக உடல் எடையைக் குறைக்க ஊக்குவிக்கிறது. சோனாக்ஷி சின்ஹாவிற்கு ஜிம் செல்வது, உடற்பயிற்சி செய்வது எல்லாம் பிடிக்காது. ஆனால் உடல் எடையைக் குறைக்க இவர் மேற்கொண்டு வரும் உடற்பயிற்சிகள், இவரது உடல் எடையில் மாற்றத்தை நன்கு வெளிக்காட்டுவதால், ஜிம்மில் உடற்பயிற்சியை விரும்பி செய்கிறாராம்.

சோனாக்ஷி மேற்கொள்ளும் எடை குறைப்பு திட்டம் அனைவருக்கும் உபயோகமாக இருக்குமா?ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். ஒருவரது உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், அவரது உடல் வாகுவிற்கு ஏற்றவாறான எடை குறைப்புத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். ஒருவரின் உடலமைப்பிற்கு ஏற்றவாறு டயட்டையும், உடற்பயிற்சிகளையும் ஒருவர் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் விரைவில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். எனவே கண்ணை மூடிக் கொண்டு சோனாக்ஷியின் டயட் திட்டத்தைப் பின்பற்றி, உடல் எடை குறையவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்.

எடை குறைப்பிற்கான சில நல்ல வாழ்க்கை முறை மாற்றங்கள்!உடல் வறட்சியைத் தவிர்க்கவும்

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால், அது உடல் எடையைக் குறைக்கும். ஆனால் உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இல்லாவிட்டால், அது உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரித்துவிடும். இதன் விளைவாக உடலினுள் அழற்சி ஏற்பட்டு, உடல் எடையும் அதிகரிக்கும். ஆகவே தினமும் குறைந்தது 2-4 லிட்டர் நீரைக் குடியுங்கள். அதுவும் வெறும் நீர் மட்டுமின்றி, இளநீர், பழச்சாறுகள், மோர் மற்றும் இதர ஜூஸ்களையும் குடிக்கலாம். இதனால் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடற்செல்கள் சிறப்பாக செயல்படும்.

வீட்டிலேயே சமைத்து உண்ணவும்வீட்டில் சமைக்கும் உணவே எப்போதும் நல்லது. அதிலும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்போருக்கு வீட்டு உணவே நல்லது. ஏனெனில் வீட்டில் சமைக்கும் போது, உணவில் சேர்க்கப்படும் பொருட்களை கட்டுப்படுத்த முடியும். அதாவது எண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களை அளவாக சேர்த்து சமைக்கலாம்.