மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா?

தமிழ் சினிமாவில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். நடிகர் கமல்ஹாசன் முதன்முதலாக தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியால் பலர் மக்களிடம் பிரபலமும் அடைந்தனர்.

அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாணை கூறலாம். இவர்களை தாண்டி அந்நிகழ்ச்சியால் மக்களிடம் அதிகம் திட்டுவாங்கியவர்கள் என்றால் ஜுலி, காயத்ரி, நமீதா என இவர்களை கூறலாம்.

தற்போது பிக்பாஸ் 2 சீசனிற்காக நடிகை ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மட்டும் இல்லாமல் நடிகர்களான ஆர்யா, ஜெயம் ரவி போன்றோர்களிடமும் பிக்பாஸ் குழு பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.